பிறந்தநாளில் வரலாற்று சாதனை... விராட் கோலிக்கு மம்தா பானர்ஜி சூப்பர் வாழ்த்து!

விராட் கோலி
விராட் கோலி

மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் வரலாற்று சாதனை படைக்க வேண்டும் என விராட் கோலியின் பிறந்தநாளில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய லீக் போட்டியில், இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

இந்த தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காக இந்திய அணி, புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைக்க முயற்சித்து வருகிறது. அதே போல், இந்த தொடரில் மற்றொரு பலம் வாய்ந்த அணியாக உள்ள தென் ஆப்பிரிக்கா, இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் நெதர்லாந்து அணியுடனான போட்டியில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. இருப்பினும் ரன் ரேட் அடிப்படையில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வரும் அந்த அணி, புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

பலம் வாய்ந்த இரு அணிகளும் இன்று களமிறங்குவதால், இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இதனிடையே இன்று, இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவருக்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

இதன் ஒரு பகுதியாக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ள அவர், “இந்திய ஜாம்பவான் பேட்ஸ்மேன் விராட் கோலி தனது பிறந்தநாளில் கொல்கத்தாவில் நமது நாட்டிற்காக வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் விளையாடுவதில் மகிழ்ச்சி! விராட்டுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எல்லா மகிழ்ச்சியும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துக்கள்!” என குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in