கேப்டனானது முதல் இந்த நாளுக்காகத்தான் தயாராகி வந்தேன்… ரோகித் ஷர்மா!

கேப்டன் ரோகித் ஷர்மா
கேப்டன் ரோகித் ஷர்மா

இந்திய அணிக்கு கேப்டனான அன்று முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடவே தயாராகி வந்ததாக ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 45 நாட்களாக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வந்த உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவின் இறுதிப் போட்டி நாளை நடைபெறுகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் இன்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இன்று காலை ரோகித் ஷர்மா, பேட் கம்மின்ஸ் ஆகியோர் இறுதிப் போட்டிக்காக போட்டோ ஷூட்டில் ஈடுபட்டனர். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணி
இந்திய அணி

இந்நிலையில், இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்வது மிகப்பெரிய தருணம் என கூறினார். மேலும், இத்தகைய ஒரு தருணத்திற்காக ஒரு அணியாக நாங்கள் கனவு கண்டோம். எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் இறுதிப் போட்டி என்பது மிகவும் சவாலானது. அதில் கவனமுடன் இருக்க வேண்டும் என்றார். உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி என்பது எங்கள் ஒவ்வொருவருக்கும் முக்கியம். அதனால், பதற்றமடையாமல் இருந்து எங்கள் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு அன்றாடம் கிடைக்கப்போவதில்லை. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை பார்த்து வளர்ந்த தனக்கு, இது வாழ்நாளில் மிகப்பெரிய தருணம் என்றார். மேலும், இந்த ஒருநாளுக்காகத்தான் கேப்டனான நாள் முதல் தயாராகி வந்ததாகவும் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக வீரர்களை தேர்வு செய்ததாகவும், அதற்காக பயிற்சியாளருடன் நிறைய விவாதித்ததாகவும் கூறினார். எங்கள் திட்டத்தில் தெளிவாக உள்ளோம். அதனை நாளை சிறப்பாக செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...


நடிகர் கமல் பன்றியை வளர்கிறார்... பிரபல பாடகி ஆவேசம்!

சத்தமில்லாமல் நடந்த மகனின் பட பூஜை... கண்டுகொள்ளாத விஜய்!

பகீர் வீடியோ... 40 தொழிலாளர்களின் உயிர் போராட்டம்... மீட்பு பணிகள் நிறுத்தி வைப்பு!

நாளை உலகக் கோப்பை பைனல்... லட்சங்களில் எகிறிய தங்கும் விடுதி வாடகை!

பரபரப்பு... காங்கிரஸ் வேட்பாளருக்கு விழுந்த செருப்படி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in