இரண்டே பந்தில் 21 ரன்கள்... வார்னர், ஹெட் அதிரடி!

வார்னர், ஹெட்
வார்னர், ஹெட்

நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் 2 பந்தில் 21 ரன் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

இமாசல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் உலகக் கோப்பை தொடரின் 27-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். நியூசிலாந்து பவுலர் மேட் ஹென்றி தனது 2வது ஓவரை வீசினார்.

முதல் பந்தில் சிக்ஸர் அடித்தார் ஹெட், அடுத்த பந்து நோ பால் ஆனது. அதில் ஹெட் ஒரு ரன் எடுத்தார். ப்ரீ ஹிட் பந்தை சந்தித்த வார்னர் சிக்ஸருக்கு விரட்டினார். அந்த பந்தும் நோ பால் ஆனதால், மீண்டும் ப்ரீ ஹிட் வாய்ப்பு கிடைத்தது. அந்த பந்திலும் அவர் சிக்ஸர் விளாசினார். இதன் மூலம் 6, 1-NB, 6-NB, 6 என 2 பந்தில் ஆஸ்திரேலியா அணிக்கு 21 ரன்கள் கிடைத்தது. நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை சிதறவிட்ட வார்னர் 81 ரன்னும், டிராவிஸ் ஹெட் 109 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in