விஷ்ணு விஷால் நடிக்கும் ‘கட்டா குஸ்தி’ - பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் தனுஷ்!

விஷ்ணு விஷால் நடிக்கும் ‘கட்டா குஸ்தி’ -  பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் தனுஷ்!
Updated on
1 min read

விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘ கட்டா குஸ்தி’. விளையாட்டினை பின்புலமாக கொண்டு உருவாகும் இப்படத்தினை செல்லா அய்யாவு இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நடிகர் தனுஷ், “ விளையாட்டு படங்களில் விஷ்ணு விஷாலைப் பார்ப்பதில் எப்போதும் மகிழ்ச்சி. இந்தப் படம் விஷ்ணுவின் மூலம் இன்னொரு மாபெரும் வெற்றிபெற வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

விஷ்ணு விஷால் ஏற்கெனவே ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘ஜீவா’ உள்ளிட்ட விளையாட்டு தொடர்பான படங்களில் நடித்துள்ளார். இப்போது இவர் நடித்து வரும் ‘கட்டா குஸ்தி’ படத்தில் ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி நாயகியாக நடிக்கிறார். இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவினை ரிச்சர்டு எம் நாதன் செய்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in