49வது சதம் அடிப்பதற்காக இந்திய அணி வீரர் விராட் கோலி சுயநலத்துடன் விளையாடினார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் சச்சின் அடித்த 49 சதங்கள்தான் இதுவரை அதிகபட்சமான சதங்களாக இருந்து வந்தது. அதனை நேற்று முன்தினம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மேட்ச்சில் 101 ரன்கள் குவித்ததன் மூலம் சமன் செய்துள்ளார் விராட் கோலி. வழக்கமான ஆட்டத்தை விட நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மேட்ச்சில் விராட் கோலியின் ஆட்டம் கொஞ்சம் மெதுவாகத்தான் காணப்பட்டது.
ஒரு சிக்சர் கூட அடிக்காத கோலி சிங்கிள்கள் எடுக்கவும் சிரமப்பட்டார். 49 ஆவது ஓவரின் 3வது பந்தில் தனது 49வது சதத்தை விராட் கோலி பூர்த்தி செய்தார். நேற்றைய ஆட்டத்தில் 121 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகளுடன் 101 ரன்களை எடுத்தார் விராட் கோலி. இதன் காரணமாக இந்திய அணியின் மொத்த ரன் குவிப்பு குறைந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும் கோலி எதிர்ப்பாளர்கள் சுயநலவாதி என்று ஹேஷ் டேக்கை பதிவிட்டு, அவரை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் வர்ணனையாளராக பணியாற்றிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஹபீசும் கோலியின் இந்த செயலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது- விராட் கோலியின் ஆட்டத்தில் நான் சுயநலத்தை பார்த்தேன். இது இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக நடக்கவில்லை. 49வது ஓவரில் அவர் சுயநலத்துடன் சதம் அடிப்பதற்காக சிங்கிள் எடுத்து விளையாடினார். அணியின் நலனுக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதேபோன்று சுயநலத்துடன் விளையாடும் வாய்ப்பு ரோகித் சர்மாவுக்கு கிடைத்தது. ஆனால் அவர் இந்திய அணியின் நலனுக்கே முக்கியத்துவம் கொடுத்தார் என்று கூறினார். அவரது பதிவு சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்