
உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன் குவித்த வீரர்கள் என்ற பட்டியலில் விராட் கோலி இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார்.
13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், இன்றைய போட்டியில் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன் கடந்த வீரர்கள் பட்டியலில், முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரிக்கி பான்டிங்கை பின்னுக்குத் தள்ளி இடத்திற்கு முன்னேறியுள்ளார். பான்டிங் உலகக் கோப்பை தொடர்களில் 46 போட்டிகளில் விளையாடி 1,743 எடுத்துள்ளார்.
இதனை கோலி 37 போட்டிகளில் கடந்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அவர் 47 ஆட்டங்களில் 2278 ரன் எடுத்துள்ளார். கோலிக்கு இன்னொரு உலகக் கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், சச்சினின் சாதனையை அவர் முறியடிக்கக்கூடும். ஆனால், அதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவாகவே உள்ளது.