
நெதர்லாந்திற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் அரைசதத்தை கடந்த விராட் கோலி 50வது சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது அவரை ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 45வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா, முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள் நெதர்லாந்து அணியின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து வருகின்றனர். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா 61 ரன்னும், கில் 51 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, களத்திற்கு வந்த விராட் கோலியும் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். ஏற்கனவே 49 சதத்தை கடந்த விராட் கோலி, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்திருந்தார். இன்றைய போட்டியில், அவர் ஒருநாள் போட்டிகளில் 50வது சதத்தை கடந்து, அதிக சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெறுவார் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருந்தனர்.
ஆனால், எதிர்பாராத விதமாக வான்டர் மெர்வேயின் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். இதனால், ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் ஏமாற்றமடைந்தனர். உலகக் கோப்பை தொடரில் ஒரு அரையிறுதிப் போட்டியும், இறுதிப்போட்டியும் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அதற்குள் கோலி தனது 50வது சதத்தை அடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
தீபாவளியன்று இப்படி விளக்கேற்றினால் ஐஸ்வர்ய கடாட்சம் கிட்டும்!
வெடித்து சிதறும் பட்டாசுகள்... 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!
மோடியை அலற வைத்த இளம்பெண்... பிரச்சார பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!
திருப்பதியில் இன்று தீபாவளி ஆஸ்தானம்... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
தனுஷ் முதல் சமந்தா வரை... மூன்றாவது நபர் தலையீட்டால் பிரிந்த பிரபலங்கள்!