விராட் கோலி டக் அவுட்; திணறும் இந்தியா... பந்துவீச்சில் அசத்தும் இங்கிலாந்து!

விராட் கோலி டக் அவுட்; திணறும் இந்தியா... பந்துவீச்சில் அசத்தும் இங்கிலாந்து!

உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து திணறி வருகின்றனர்.

லக்னோவில் நடைபெறும் 29வது உலகக் கோப்பை போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்தியா இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் என்ற பெருமையை பெரும். ஆனால், இங்கிலாந்து அணி இதுவரை 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால், அந்த அணிக்கான அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட பறிபோயுள்ளது. இந்நிலையில், இரண்டு அணிகளுமே தங்களுக்கான வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்புடன் விளையாடி வருகின்றன.

முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் 9 ரன்களில் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி வில்லி பந்தில் டக் அவுட்டானார். அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 4 ரன்களில் வோக்ஸ் பந்தில் அவுட்டானார். ஆனாலும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் இணைந்து நிதானமாக ஆடி வருகின்றனர்.

இந்திய அணி 19.2 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 43 ரன்களும், ராகுல் 15 ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in