வலியால் துடித்த ஹர்திக் பாண்டியா... 6 ஆண்டுகளுக்கு பிறகு பந்து வீசிய விராட் கோலி!

விராட் கோலி பந்து வீச்சு
விராட் கோலி பந்து வீச்சு

இந்தியா - வங்கதேசம் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 9வது ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்டியா பந்தை தடுக்க முயன்றபோது, பந்து காலில் பலமாக பட்டதில் அவர் காயமடைந்தார். வலியால் துடித்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார். அவர் அந்த ஓவரில் 3 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் வெளியேறியதால், மீதமுள்ள பந்துகளை வீச புதிய பவுலர் தேவைப்பட்டார். இதையடுத்து, விராட் கோலி 9 வது ஓவரின் மீதமுள்ள 3 பந்துகளை வீசினார்.

விராட் கோலி கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் பந்து வீசினார். இதில் 2 ஓவருக்கு 12 ரன்களை விட்டுக்கொடுத்த அவர் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளில் 161 ஓவர்களை வீசியுள்ள அவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in