நம்பர் 1 பேட்ஸ்மேன் விராட் கோலி - ஒரே நாளில் இரண்டு சாதனைகள்: உலகக்கோப்பையில் அபாரம்!

நம்பர் 1 பேட்ஸ்மேன் விராட் கோலி - ஒரே நாளில் இரண்டு சாதனைகள்: உலகக்கோப்பையில் அபாரம்!

டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணியின் மஹேல ஜெயவர்த்தனேவின் சாதனையை முறியடித்து அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையைப் பெற்றார் விராட் கோலி.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை இன்று படைத்துள்ளார். அடிலெய்டு மைதானத்தில் இன்று நடந்த சூப்பர் 12 சுற்றின் குரூப் 2 பிரிவு போட்டியில் வங்காளதேச அணியுடன் இந்தியா மோதியது. இந்தப் போட்டியில் 16 ரன்களை எடுத்தபோது, இலங்கையின் மஹேல ஜெயவர்த்தனேவின் 1,016 ரன்களை கோலி கடந்தார்.

வங்கதேசத்துக்கு எதிரான இன்றையப் போட்டியில் 44 பந்துகளில் 64 ரன்களை எடுத்தார் கோலி. இதன் மூலமாக 23 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி கோலி 1065 ரன்கள் குவித்துள்ளார். இதில் 13 அரைசதங்கள் அடக்கம், உலகக்கோப்பையின் கோலியின் அதிகபட்ச ரன் 89 ஆகும். 2ம் இடத்தில் 1016 ரன்களுடன் ஜெயவர்த்தனேவும், 3ம் இடத்தில் 965 ரன்களுடன் கிறிஸ் கெய்லும் உள்ளனர். இந்தப்பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 4ம் இடத்தில் உள்ளார். இவர் 37 போட்டிகளில் விளையாடி 921 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 9 அரைசதங்கள் அடக்கம்.

தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையிலும் விராட் கோலி அதிக ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். 4 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 220 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 3 அரை சதங்கள் அடக்கம். இவருக்கு அடுத்தபடியாக நெதர்லாந்து அணியின் மேக்ஸ் ஓ டாவ்ட் 213 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், இலங்கையின் குஷல் மெண்டிஸ் 205 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in