'பாகிஸ்தான் போட்டி என் இதயத்தில் எப்போதும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்' - விராட் கோலி நெகிழ்ச்சி!

'பாகிஸ்தான் போட்டி என் இதயத்தில் எப்போதும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்' - விராட் கோலி நெகிழ்ச்சி!

2022 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடனான போட்டி என் இதயத்தில் எப்போதும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று விராட் கோலி நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை 2022 தொடரின் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள விராட் கோலி, "அக்டோபர் 23, 2022 என் இதயத்தில் எப்போதும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இதற்கு முன்பு கிரிக்கெட் விளையாட்டில் இது போன்ற ஆற்றலை உணர்ந்ததில்லை. என்ன ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மாலை அது" என்று பதிவிட்டுள்ளார்.

அக்டோபர் 23ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு 160 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 31 ரன்களுக்குள் இந்தியா 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அந்த நேரத்தில் விராட் கோலி உடன் ஹர்த்திக் பாண்ட்யா கூட்டணி அமைத்தார். இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் பாண்டியா (40) அவுட்டானார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் (2) ரன்னில் ஏமாற்றினார். விராட் கோலி சிக்சர் அடித்து வெற்றிக்குப் போராட, கடைசி பந்தில் அஸ்வின் ஒரு ரன் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். இந்தப்போட்டியில் விராட் கோலி 53 பந்துகளில் 4 சிக்சர், 5 பவுண்டரியுடன் 82 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றிக்கு வித்திட்டார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022 டி20 உலகக்கோப்பையில் மொத்தம் 296 ரன்களை எடுத்து தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in