ஜெயிக்கப்போவது யாரு?; பாகிஸ்தான் - நியூசிலாந்து இன்று மோதல்: உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

பாகிஸ்தான் - நியூசிலாந்து  அணிகள்
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள்

நியூசிலாந்து, பாகிஸ்தான் என இரு அணிகளுக்கும் அரையிறுதி தகுதி பெறுவதற்கான கடைசி வாய்ப்பாக இன்றைய போட்டி உள்ளது. அதனால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

 நியூசிலாந்து
நியூசிலாந்து

உலகக் கோப்பை தொடரின் 35வது போட்டி நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே பெங்களுருவில் நடைபெறுகிறது. பகல் நேர போட்டியாக காலை 10.30 மணி சின்னசாமி மைதானத்தில் இந்த போட்டி தொடங்குகிறது.

நியூசிலாந்து அணி 4 தொடர் வெற்றி, ஹாட்ரிக் தோல்வி என 7 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்கிற சூழலில் நியூசிலாந்து உள்ளது.

நல்ல பார்மில் இருந்த நியூசிலாந்த அணி தொடர் தோல்விகளால் துவண்டு போய் இருக்கும் நிலையில், முக்கிய வீரர்களின் காயம் கவலை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஏற்கெனவே காயத்தால் கேன் வில்லியம்சன், மார்க் சாப்மேன் ஆகியோர் அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போது அணியின் முக்கிய பவுலரான மேட் ஹென்றியும் காயத்தால் தொடரை விட்டு வெளியேறுவது பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு வெற்றியுடன் நல்ல ரன் ரேட்டும் அவசியமாகிறது. இதை செய்தால் மட்டுமே அரை இறுதி பற்றி நினைத்து பார்க்க முடியும். அதுவும் மற்ற அணிகளின் செயல்பாட்டில் மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

நான்கு தொடர் தோல்விகளுக்கு பிறகு கடந்த போட்டியில் ஒரு வழியாக வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது பாகிஸ்தான். இந்த வெற்றியால் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்து கொண்டாலும், கூடவே அதிர்ஷ்டமும் தேவைப்படும் நிலையில் பாகிஸ்தான் உள்ளது.

பேட்டிங், பவுலிங்கில் சிறப்பாக இருந்து வரும் பாகிஸ்தான் பீல்டிங்கில் ஏராமான ரன்களை எதிரணிக்கு தாரைவார்த்து கொடுக்கும் அணியாக உள்ளது. எனவே பீல்டிங்கில் மிகவும் கவனமாக செயல்பட்டால் எதிரணியை கட்டுப்படுத்தும் அனைத்து அம்சங்களும் கொண்ட அணியாகவே பாகிஸ்தான் உள்ளது. எனவே, இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in