டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக வென்றது ஐக்கிய அரபு அமீரகம்: சூப்பர் 12 சுற்றுக்கு நெதர்லாந்து தகுதி!

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக வென்றது ஐக்கிய அரபு அமீரகம்: சூப்பர் 12 சுற்றுக்கு நெதர்லாந்து தகுதி!

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக தனது வெற்றியை பதிவு செய்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம் அணி

ஆஸ்திரேலியாவின் ஜீலாங் மைதானத்தில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் நமீபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முகமது வசீம் நிலைத்து ஆடினார். விரித்யா அரவிந்த் 21 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்ததாக கேப்டன் ரிஸ்வானும் அதிரடி காட்டினார். இதனால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. வசீம் 50 ரன்களையும், ரிஸ்வான் 43 ரன்களையும், ஹமீது 23 ரன்களையும் எடுத்தனர்.

143 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணியின் ஆட்டக்காரர்கள் ஐக்கிய அமீரகம் அணியின் பந்துவீச்சை எதிர்க்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் களமிறங்கிய டேவிட் வீஸ் மட்டும் நிலைத்து ஆடி 36 பந்துகளில் 56 ரன்களை குவித்தார். ட்ரம்பெல்மான் 25 ரன்களை எடுத்தார். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஐக்கிய அமீரகம் அணியின் சார்பில் பசீல் ஹமீது மற்றும் ஜாஹூர் கான் தலா இரண்டு விக்கெட்டுகளையும், பழனியப்பன் மெய்யப்பன் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். யுஏஇ அணியின் 50 ரன்களை குவித்த முகமது வசீம் ஆட்டநாயகனாக தேர்வானார்.

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் யுஏஇ அணியின் முதல் வெற்றி இதுவாகும். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற போதிலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி ‘ஏ’ பிரிவின் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. நமீபியா அணி தோல்வியை சந்தித்ததால் ‘ஏ’ பிரிவில் இருந்து நெதர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது, இந்தப் பிரிவில் ஏற்கெனவே இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. நமீபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் உலகக்கோப்பை போட்டியிலிருந்து வெளியேறின.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in