வெற்றி பெறும் கட்டாயத்தில் இந்திய அணி - இலங்கையை வீழ்த்துமா?

வெற்றி பெறும் கட்டாயத்தில் இந்திய அணி - இலங்கையை வீழ்த்துமா?

ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணியுடன் இந்திய அணி இன்று மோதவுள்ளது.

ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இலங்கை அணியை இந்தியா எதிர்கொள்கிறது. சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது இந்தியா. இதன் காரணமாக இன்று நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயம் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணியின் தரப்பில் விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். ஆனால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்புவதால் ரன் குவிப்பதில் இந்திய அணி சிரமப்படுகிறது. அதுபோல இந்திய அணியின் பந்துவீச்சாளர்களும் சோபிக்கவில்லை என்பதால் எதிரணியை கட்டுப்படுத்துவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் இலங்கை அணியில் கேப்டன் ஷனகா, குஷல் மெண்டிஸ், பானுகா ஆகியோரின் பேட்டிங் நல்ல பார்மில் உள்ளது. பந்துவீச்சிலும் ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, தீக்‌ஷனா உள்ளிட்டோர் சிறப்பாக செயல்படுகின்றனர்.

ஆசியக்கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். இதில் முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்ததால், இன்று நடைபெறும் இலங்கை போட்டி மற்றும் அடுத்து நடக்கவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வென்றால் மட்டுமே இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில் சூப்பர் 4 சுற்றில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் ஏற்கெனவே ஒரு போட்டியில் வென்று முன்னணியில் உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in