ஏப்.8ல் சென்னை - கொல்கத்தா ஐபிஎல் போட்டி... டிக்கெட் விற்பனை எப்போது தெரியுமா?

சிஎஸ்கே - கேகேஆர் போட்டி
சிஎஸ்கே - கேகேஆர் போட்டி

சென்னையில் வரும் 8ம் தேதி நடக்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 5ம் தேதி காலை 9.30 மணிக்கு ஆன்லைனில் தொடங்கவுள்ளது.

சென்னை அணி கேட்டன் ருதுராஜ் உடன் தோனி
சென்னை அணி கேட்டன் ருதுராஜ் உடன் தோனி

17வது ஐபில் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடப்பு ஐபிஎல்லில் சென்னையில் சிஎஸ்கே அணி விளையாடவுள்ள அனைத்து போட்டிக்களுக்கான டிக்கெட்டுகளும் ஆன்லைனில் மட்டுமே விற்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதனால் சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விடுகின்றன. சில நேரங்களில் இணையதளமே முடங்குவதால், டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் ஏமாற்றமும் அடைந்து வருகின்றனர். டிக்கெட் வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

கொல்கத்தா அணி வீரர் ஸ்ரேயாஸ்
கொல்கத்தா அணி வீரர் ஸ்ரேயாஸ்

வரும் 8ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி மாலை 7.30 மணிக்கு துவங்க உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை எப்போது துவங்கும் என்று சிஎஸ்கே ரசிர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், வரும் 8ம் தேதி நடக்கும் சென்னை - கொல்கத்தா போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் வரும் 5ம் தேதி காலை 9.30 மணி முதல் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு இருக்கைக்கும் ஏற்ப டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லோயர் சி, டி, இ இருக்கைகளுக்கு ரூ.1700, அப்பர் ஐ,ஜே,கே இருக்கைகளுக்கு ரூ.2500, லோயர் ஐ, ஜே,கே இருக்கைகளுக்கு ரூ.4000, அப்பர் சி, டி, இ இருக்கைகளுக்கு ரூ. 3500, கேஎம்கே டெடர்ஸ்-க்கு ரூ.6000 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!

பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு!

'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்... ரசிகர்கள் வாழ்த்து!

ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்... வைரலாகும் அசத்தல் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in