இந்த அணியுடன் இப்படியா விளையாடுவது - ஸ்ரேயாஸ் ஐயர் மீது சுனில் கவாஸ்கர் காட்டம்!

சுனில் கவாஸ்கர், ஸ்ரேயாஸ் ஐயர்
சுனில் கவாஸ்கர், ஸ்ரேயாஸ் ஐயர்

புனேயில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்கதேச அணி, இந்திய பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 256 ரன் மட்டுமே எடுத்தது.

இதற்கடுத்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி கோலியின் அபார ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது சுப்மன் கில் 53 ரன்னிலும், அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இருவரும் மெஹதி ஹசன் மிராஸ் பந்துவீச்சை தாக்கி ஆட முயன்று தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இது குறித்து தனது விமர்சனத்தை முன் வைத்துள்ள முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், ``ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் இருவரும் தேவையில்லாமல் அவசரப்பட்டு விளையாடி தங்கள் விக்கெட்டை இழந்தார்கள். ஆனால், விராட் கோலி அப்படி செய்யமாட்டார். அவர் எப்போதும் கவனமுடனே விளையாடுகிறார். அவரது விக்கெட்டை வீழ்த்த பந்து வீச்சாளர்கள் தான் மெனக்கிட வேண்டும். அதுதான் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். அவர் சதமடிக்கும் வாய்ப்பை ஒருபோதும் தவறவிடுவதில்லை.

சதம் அடிப்பது எப்படி என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். கில் குறைந்தபட்சம் சதங்கள் அடிக்கிறார். ஆனால், ஸ்ரேயாஸ் அப்படி கிடையாது. பேட்டிங் வரிசையில் நான்காம் இடத்தில் விளையாட வரும் ஒருவர், பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் மிகச் சாதாரணமான பந்துவீச்சில் ஆட்டமிழப்பது என்பது அவர் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை தூக்கி எறிவதற்கு சமம்'' என கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in