அந்த 2 ஓவரால் நிலைகுலைவார்கள் - இந்தியாவின் தோல்வியை முன்பே கணித்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்!

ரோகித் சர்மா
ரோகித் சர்மா
Updated on
2 min read

2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து இருக்கும் நிலையில், இப்படித்தான் நடக்கும் என பாகிஸ்தான் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் முன்பே காரணத்தோடு கூறி இருந்ததை கிரிக்கெட் ரசிகர்கள் இப்போது விவாதித்து வருகின்றனர்.

இந்திய அணி லீக் சுற்றில் வெற்றிகளை குவித்தாலும், அரை இறுதி, இறுதிப் போட்டி போன்ற நாக்-அவுட் போட்டிகளில் இந்திய அணியிடம் ஒரு பலவீனம் வெளிப்படும். அதை வைத்து இரண்டே ஓவரில் எதிரணி, இந்தியாவை நிலைகுலைய வைத்து விடும் என அவர் இந்திய அணியை எச்சரித்து இருந்தார்.

2023 உலகக்கோப்பை தொடரில் இந்தியா லீக் சுற்றில் தான் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இருந்தது. நெதர்லாந்து போட்டி மட்டுமே மீதமிருந்தது. அப்போது தான் மிஸ்பா உல் ஹக் ஒரு கிரிக்கெட் விவாத நிகழ்ச்சியில் பேசும் போது, இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி தொடர் வெற்றிகளை பெற்று வருவது அரை இறுதி, இறுதிப் போட்டியில் அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கூறி இருந்தார்.

மிஸ்பா உல் ஹக்
மிஸ்பா உல் ஹக்

தொடர்ந்து வெற்றி பெறுவதால் இந்திய அணி உச்சத்தில் இருக்கிறது. அப்படி தோல்வியே அடையாமல், பெரிய தவறுகளே செய்யாமல் உச்ச நிலையில் இருக்கும் போது, இந்திய அணிக்கு நாக்-அவுட் போட்டிகளில் சரியாக செயல்பட வேண்டும் என்ற அழுத்தம் அதிகமாக இருக்கும்.

ஆனால், ஏற்கெனவே இந்த உலகக்கோப்பை தொடரில் தோல்விகளை சந்தித்து விட்ட ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு அத்தனை அழுத்தம் இருக்காது என்பதை சுட்டிக் காட்டி, இந்திய அணிக்கு இரண்டு ஓவர்கள் அழுத்தம் கொடுத்தாலே நிலை குலைந்து விடும். அந்த அழுத்தத்தில் இருந்து மீள முடியாமல் இந்தியா தவிக்கும் எனக் கூறி இருந்தார் மிஸ்பா உல் ஹக்.

அவர் கூறியது போலவே, இந்தியா பேட்டிங் செய்த போது ரோஹித் சர்மா 10வது ஓவரில் ரோஹித் சர்மா 47 ரன்கள் எடுத்த நிலையில் மேக்ஸ்வெல் ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து 12வது ஓவரில் அதுவரை பந்து வீசி இருக்காத ஆடம் ஜம்பாவை பந்து வீச அழைத்தார் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ். அந்த ஓவரிலிருந்து வழக்கமாக அதிரடியாக ஆடும் கோலி, ராகுல் ஆகியோர் வெறும் சிங்கிள் ரன்களாகவே எடுக்க ஆரம்பித்தனர்.

ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர்

இந்த 2 - 3 ஓவர் அழுத்தத்துக்கு பின் இந்தியா 29 ஓவர்களில் வெறும் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து இருந்தது. அதனாலேயே இந்தியா வெறும் 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறைந்த ரன்கள் எடுத்ததால் அதை வைத்து பந்துவீச்சில் சமாளிக்க முடியாமல் இந்தியா தோல்வி அடைந்தது. மிஸ்பா உல் ஹக் சொன்ன அந்த இரண்டு ஓவர்கள் 10 மற்றும் 11வது ஓவர்கள் தான்.

இது போன்ற தொடர் விக்கெட் இழப்புக்களை இந்தியா லீக் சுற்றில் சந்தித்தது. ஆனால், லீக் போட்டி என்பதால் பெரிய அழுத்தம் ஏற்படவில்லை. ஆனால், இறுதிப் போட்டி என்ற உடன் அதன் அழுத்தம் இன்னும் அதிகரிக்கவே, இரண்டு ஓவர் அழுத்தம் என்பது இந்திய அணியை மொத்தமாக வீழ்த்தி விட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in