தினமும் 8 கிலோ மட்டன் சாப்பிடுகிறார்கள், ஆனால்... பாகிஸ்தான் வீரர்களை விளாசும் வாசிம் அக்ரம்!

தினமும் 8 கிலோ மட்டன் சாப்பிடுகிறார்கள், ஆனால்... பாகிஸ்தான் வீரர்களை விளாசும் வாசிம் அக்ரம்!

பல பாகிஸ்தான் அணி வீரர்கள் உடற்தகுதியுடன் இல்லை என்றும், அதன் காரணமாகவே உலகக்கோப்பை போட்டிகளில் ஃபீல்டிங்கில் மோசமாக செயல்படுவதாகவும் கடுமையாக விளாசி இருக்கிறார் வாசிம் அக்ரம்.

பல பாகிஸ்தான் அணி வீரர்கள் உடற்தகுதியுடன் இல்லை என்றும், அதன் காரணமாகவே உலகக்கோப்பை போட்டிகளில் ஃபீல்டிங்கில் மோசமாக செயல்படுவதாகவும் கடுமையாக விளாசி இருக்கிறார் வாசிம் அக்ரம். கடந்த மாதங்களில் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடருக்கு முன்பாக பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருந்தது.

அந்த நேரத்தில் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் அரையிறுதிக்கான உறுதியான அணி என்று பல முன்னாள் வீரர்களாலும் கூறப்பட்டது. இந்திய அணியை விட கொஞ்சம் பாகிஸ்தான அணி முன்னணியில் இருக்கிறது என்றும் கணிக்கப்பட்டது.

இப்படியான நிலையில் ஆசியக் கோப்பை துவங்கியதும் பாகிஸ்தான் அணியின் பலவீனங்கள் வெளிப்பட ஆரம்பித்தது. அந்த அணி வெளிநாடுகளில் வந்து விளையாடும் பொழுது, அவர்களால் உள்நாட்டில் காட்டும் சிறப்பான ஆட்டத்தை காட்ட முடியவில்லை.

இந்த நிலையில் தற்பொழுது பாகிஸ்தான் அணி நேற்று உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக படுதோல்வி அடைந்திருக்கிறது. ஆப்கானிஸ்தான அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெகு எளிதாக 283 ரன்கள் எனும் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

இது அந்த நாட்டு ரசிகர்களையும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களையும் கடுமையாக கோபம் அடைய வைத்திருக்கிறது. அவர்கள் இந்த தோல்வி குறித்தும் பாகிஸ்தான் அணி வீரர்கள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

இந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் கூறும் பொழுது “இன்று மிகவும் சங்கடமாக இருந்தது. இரண்டு விக்கெட் மட்டும் இழந்து 280 ரன்களுக்கு மேல் சேஸ் செய்வது பெரிய விஷயம். அங்கு மைதானம் எதுவும் ஈரமாக இல்லை. ஆனால் பாகிஸ்தான் வீரர்களின் ஃபீல்டிங் சம்பந்தமான உடல் தகுதியை பாருங்கள்.

நாங்கள் கடந்த இரண்டு மூன்று வாரமாக சரியாக விளையாடவில்லை என்று அலறிக் கொண்டிருக்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் தகுதி சோதனை எதுவும் செய்யப்படவில்லை. நான் இந்த விஷயம் சம்பந்தமாக தனிப்பட்ட வீரர்களின் பெயர்களை எடுத்தால் அவர்களது முகம் வாடிவிடும். இவர்கள் தினமும் 8 கிலோ ஆட்டு இறைச்சி சாப்பிடுவது போல் தெரிகிறது. இவர்கள் அதனால்தான் சோதனையை மறுக்கிறார்கள்.

தொழில் ரீதியாக நீங்கள் பணம் பெறுகிறீர்கள். நாட்டிற்காக விளையாடுகிறீர்கள். எதற்கும் ஒரு குறிப்பிட்ட அளவுகோல் இருக்க வேண்டும். மிஸ்பா வந்த பொழுது அவர் இதற்கு அளவுகோல் வைத்தார். ஆனால் வீரர்கள் அவரை வெறுத்தார்கள். ஆனால் அது பலன் அளித்தது. பீல்டிங் என்பது உடல் தகுதி பற்றியது. இங்குதான் வீரர்களுக்கு பிரச்சினை. இதெல்லாம் மாற வேண்டும் என்று பிரார்த்தனைதான் செய்ய முடியும்” என்று கூறி இருக்கிறார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in