ஆளும் கட்சியில் சேர்ந்தார் கிரிக்கெட் அணியின் கேப்டன் - நாடாளுமன்ற தேர்தலில் போட்டி!

ஆளும் கட்சியில் சேர்ந்தார் கிரிக்கெட் அணியின் கேப்டன் - நாடாளுமன்ற தேர்தலில் போட்டி!

வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட ஆளும் வங்கதேச கட்சியில் இணைந்துள்ளார்.

வங்கதேசத்தில் அடுத்த வருடம் ஜனவரி 7ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட ஆளும் வங்கதேச அவாமி லீக்கின் வேட்புமனுவைக் கோரி, முறைப்படி அரசியலில் நுழைந்துள்ளார்.

அவாமி லீக் இணைச் செயலாளர் பஹவுதீன் நசிம், ஷகிப் அல் ஹசன் தமது கட்சியில் இணைந்ததை உறுதிப்படுத்தினார். இந்த தேர்தலை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க உள்ளன.

ஷகிப் அல் ஹசன்
ஷகிப் அல் ஹசன்

ஷகிப் அல் ஹசன் தங்கள் கட்சியில் இணைந்ததை உறுதிப்படுத்திய பஹவுதீன் நசிம், "அவர் ஒரு பிரபலம் மற்றும் நாட்டின் இளைஞர்களிடையே பெரும் புகழ் பெற்றவர்" என்று கூறினார். ஷகிப்பின் வேட்புமனுவை பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் கட்சி நாடாளுமன்ற குழு உறுதி செய்ய வேண்டும். அவர் தனது தென்மேற்கு சொந்த மாவட்டமான மகுரா அல்லது தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று நசிம் கூறினார்.

நேற்றுடன் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் வங்கதேச அணி படுமோசமான தோல்வியடைந்து லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த அணியின் கேப்டனாக ஷகிப் அல் ஹசன் இருந்தார். இலங்கைக்கு எதிரான போட்டியின் போது ஏஞ்சலோ மத்யூஸுக்கு எதிரான வழக்கத்திற்குமாறான ‘ டைம் அவுட்’ காரணமாக அவர் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in