வென்றது பாகிஸ்தான்; முதலிடத்தில் தொடரும் இந்தியா: சூப்பர் 12 சுற்றில் அணிகள் பெற்றுள்ள புள்ளிகள் என்ன?

வென்றது பாகிஸ்தான்; முதலிடத்தில் தொடரும் இந்தியா: சூப்பர் 12 சுற்றில் அணிகள் பெற்றுள்ள புள்ளிகள் என்ன?

டி20 உலகக்கோப்பையின் இன்றையப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதன் மூலமாக, குரூப் 2 பிரிவின் புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் தொடர்கிறது.

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றின் குரூப் 2 பிரிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. நேற்றைய போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா 6 புள்ளிகளைப்பெற்று முதலிடத்தைப் பிடித்தது. இன்றைய போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றதால் தென் ஆப்பிரிக்க அணி 4 போட்டிகளில் விளையாடி 5 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் தொடர்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் தலா 4 போட்டிகளில் விளையாடி தலா 4 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. ஜிம்பாப்வே அணி 4 போட்டிகளில் விளையாடி 3 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும், நெதர்லாந்து அணி 4 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளது.

குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து அணி 4 போட்டிகளில் விளையாடி 5 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அடுத்ததாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா 4 போட்டிகளில் விளையாடி, தலா 5 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. இலங்கை அணி 4 போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகள் பெற்று 4ம் இடத்தில் உள்ளது. அயர்லாந்து அணி 4 போட்டிகளில் விளையாடி 3 புள்ளிகள் பெற்று 5ம் இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 4 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் 1 பிரிவில் 6 அணிகளும், குரூப் 2 பிரிவில் 6 அணிகளும் தங்களுக்குள் மோதி வருகின்றன. இந்த இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெறும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in