டி20 உலகக்கோப்பை... ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு; சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு!

ரோகித், விராட் கோலி இந்திய அணி
ரோகித், விராட் கோலி இந்திய அணி

டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள 19 வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ஆம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் தொடங்க இருக்கிறது.

இந்த உலகக்கோப்பை தொடரில் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இதில் பங்கேற்கும் 20 அணிகளும் வரும் மே 1ஆம் தேதிக்குள் 15 பேர் கொண்ட அணியை அறிவிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

ரோகித் ஷர்மா
ரோகித் ஷர்மா

நேற்று உலகக்கோப்பையில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இன்று உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியின் வீரர்கள் பட்டியல் வெளியானது.

இந்த நிலையில் இன்று இந்திய அணியும் தனது வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ரோகித் ஷர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் உள்ள அணியில் ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சஹல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். மாற்று வீரர்களாக சுப்மன் கில், ரிங்கு சிங், ஆவேஷ் கான், கலீல் அகமது ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அரசு உஷார்... கேரளாவில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல் பரவல்!

பழிக்குப்பழி... திருச்சியில் பிரபல ரவுடி முத்துக்குமார் பட்டப்பகலில் படுகொலை!

தூக்க கலக்கத்தில் பாறையில் மோதிய வேன் ஓட்டுநர்... 31 பேர் படுகாயம்!

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபர்... சுற்றி வளைத்து கைது செய்த போலீஸார்!

கார் மீது சிலிண்டர் லாரி மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in