டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் விளையாடி வரும் அணிகளின் புள்ளிவிவரம் பற்றிய முழுமையான பட்டியலைப் பார்ப்போம்...
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் 1 பிரிவில் 6 அணிகளும், குரூப் 2 பிரிவில் 6 அணிகளும் தங்களுக்குள் மோதி வருகின்றன. இந்த இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெறும்.
குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து அணி 3 போட்டிகளில் விளையாடி 5 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்த அணிக்கு +3.850 ரன்ரேட் உள்ளது. அடுத்ததாக இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா 3 போட்டிகளில் விளையாடி, தலா 3 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. இலங்கை அணி 3 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகள் பெற்று 5ம் இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
குரூப் 2 பிரிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 போட்டிகளில் விளையாடி 5 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா, வங்கதேசம் அணிகள் தலா 3 போட்டிகளில் விளையாடி தலா 4 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. ஜிம்பாப்வே அணி 3 போட்டிகளில் விளையாடி 3 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், பாகிஸ்தான் அணி 3 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும், நெதர்லாந்து அணி 3 போட்டிகளில் விளையாடி புள்ளிகள் எதுவும் பெறாமல் கடைசி இடத்திலும் உள்ளது.