டி20 உலகக்கோப்பை: சூப்பர் 12 சுற்றில் மோதும் அணிகள் எவை தெரியுமா? - விரிவான தகவல்கள்

டி20 உலகக்கோப்பை: சூப்பர் 12 சுற்றில் மோதும் அணிகள் எவை தெரியுமா? - விரிவான தகவல்கள்

உலகக்கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இந்த சுற்றில் இடம்பெற்றுள்ள அணிகளைப்பற்றி பார்ப்போம்...

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பைத் தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தது. முதல் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றிருந்த இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. ‘பி’ பிரிவில் இடம்பெற்றிருந்த ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. இதன் காரணமாக மேற்கிந்திய தீவுகள், ஸ்காட்லாந்து, நமீபியா, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் உலகக்கோப்பையிலிருந்து வெளியேறின.

ஏற்கெனவே உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம் ஆகிய 8 அணிகள் தகுதி பெற்றிருந்தன. இப்போது மேலும் 4 அணிகள் இந்த சுற்றில் இணைந்துள்ளன.

சூப்பர் 12 சுற்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குரூப் 1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன. குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும். இறுதிப்போட்டி நவம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது.

முதல் சுற்று போட்டிகள் நிறைவடைந்த காரணத்தால் இனி வரும் உலகக்கோப்பை போட்டிகள் அனல் பறக்கும். இன்று சிட்னியில் நடைபெறும் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் பெர்த் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அனைவரும் எதிர்பார்க்கும் நாளைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in