ரசிகர்களுக்கு ஷாக்! நிருபராக மாறிய சூர்யகுமார் யாதவ்!

ரசிகர்களை சந்தித்த சூர்யகுமார் யாதவ்
ரசிகர்களை சந்தித்த சூர்யகுமார் யாதவ்

இந்திய கிரிக்கெட் அணியில் 360 டிகிரி பேட்ஸ்மேனாக அறியப்படுபவர் சூர்யகுமார் யாதவ். அவரது அதிரடி ஆட்டத்தாலும், சிக்ஸர் மழையாலும் ரசிகர்களை மகிழ்வித்து வருபவர். இந்நிலையில், அவர் புதிய அவதாரம் எடுத்து மும்பை வீதிகளில் ரசிகர்களை சந்தித்த நிகழ்வு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

நிருபராக சூர்யகுமார் யாதவ்
நிருபராக சூர்யகுமார் யாதவ்

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 33வது லீக் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் இன்று காலை ரசிகர்களை வித்தியாசமான அவதாரத்தில் சந்தித்தார்.

நிருபராக சூர்யகுமார் யாதவ்
நிருபராக சூர்யகுமார் யாதவ்

கையில் கேமராவுடன், முகத்தில் மாஸ்க் அணிந்த படி மும்பை வீதியில் வலம் வந்த அவர், ரசிகர்களிடம் தன்னை நிருபர் என அறிமுகப்படுத்திக்கொண்டு இந்திய அணி குறித்து பேட்டி எடுத்தார். அப்போது ரசிகர்கள் தங்கள் பதில்களை அளிக்க, சிறிது நேரம் கழித்து மாஸ்க்கை அகற்றிவிட்டு ரசிகர்கள் முன் நின்றார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் பலரும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

இதனையடுத்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துகொண்ட சூர்யகுமார் யாதவ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதேபோன்று, தனது சக அணி வீரரான ரவீந்திர ஜடேஜாவையும் நிருபரை போல் சென்று சந்தித்து சூர்யகுமார் யாதவ் அதிர்ச்சியளித்தார். இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 12 புள்ளிகளுடன் கிட்டதட்ட அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இலங்கையுடனான நாளைய போட்டியில் வெற்றி பெற்றால், இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை பெறும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in