மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனும், பிசிசிஐ செயலாளருமான ஜெய்ஷாவின் அழுத்தத்தால்தான் இலங்கை கிரிக்கெட் அழிக்கப்படுகிறது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரனதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியை தற்காலிகமாக நீக்கம் செய்து ஐசிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி மிகவும் மோசமாக விளையாடியது. 9 லீக் போட்டிகளில் 7-ல் தோல்வி அடைந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அந்நாட்டு அரசு, இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைப்பதாக அறிவித்தது. முன்னதாக இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மட்டும் கலைக்கப்பட்ட நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பிறகு இலங்கை கிரிக்கெட் வாரியம் முழுமையாக கலைக்கப்பட்டது. இந்த நிலையில், இலங்கை அணிக்கு இடைக்காலத் தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை மேற்கொண்டது. இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளில் நாட்டின் தலையீடு, ஆட்சியாளர் தலையீடு இருக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனும், பிசிசிஐ செயலாளருமான ஜெய்ஷா இலங்கை அணியை சிதைத்தாகவும், அவரின் அழுத்ததால் தான் இலங்கை அணி கலைக்கப்பட்டதாகவும் இலங்கையின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரனதுங்க குற்றம்சாட்டியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ஒரு நாட்டின் முடிவில், உரிமையில் தலையீட பிசிசிஐக்கு அதிகாரம் இல்லை, ஆனால் தனது அதிகாரத்தை ஜெய்ஷா தவறாக பயன்படுத்துகிறார் என குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!
தெறிக்க விட்ட மதுரைக்காரைங்க... டாஸ்மாக்கில் தீபாவளி வசூல் ரூ.467 கோடி!
ஆந்திராவை அலற வைக்கும் ஜட்டி கேங்...போலீஸார் எச்சரிக்கை!
பகீர் வீடியோ... மதுவை புகட்டி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!
அம்மா மினி கிளினிக் அவ்வளவுதான்... முடித்து வைத்தார் மா.சுப்ரமணியன்!