டாஸ் வென்று பீல்டிங்கை தேர்ந்தெடுத்த ஆப்கானிஸ்தான்... நிதானமாக ஆடும் இலங்கை!

டாஸ் வென்று பீல்டிங்கை தேர்ந்தெடுத்த ஆப்கானிஸ்தான்... நிதானமாக ஆடும் இலங்கை!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 30வது லீக் ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தானுடன் இலங்கை அணி மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியுள்ள போட்டியில் இலங்கை அணி முதலில் பேட் செய்து வருகிறது. இப்போட்டியில் இலங்கை வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளைப் பெற்று 4 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. தனது கடைசி லீக் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் அந்த அணி களமிறங்குகிறது. இந்தப் போட்டி இலங்கைக்கு முக்கியமான ஆட்டமாக பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதால் இலங்கை வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

ஆப்கானிஸ்தான் அணியும் இந்த தொடரில் 5 போட்டிகளில் ஆடி, 2 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. எனவே இரு அணிகளுமே வெற்றிபெறும் முனைப்புடன் இந்தப் போட்டியில் களமிறங்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in