பாலியல் குற்றச்சாட்டு - இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக ஆஸ்திரேலியாவில் அதிரடி கைது!

பாலியல் குற்றச்சாட்டு - இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக ஆஸ்திரேலியாவில் அதிரடி கைது!

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக சிட்னியில் கைது செய்யப்பட்டார்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நவம்பர் 2-ம் தேதி 29 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் விசாரணையைத் தொடர்ந்து, 31 வயதான குணதிலக கைது செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிட்னி நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் தொடர்பு கொண்டு அந்தப் பெண்ணை சந்தித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இலங்கை அணி உலகக்கோப்பை போட்டியிலிருந்து வெளியேறியது. இடது கை பேட்ஸ்மேனான குணதிலக, தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையின் முதல் சுற்று ஆட்டத்தில் நமீபியாவுக்கு எதிராக விளையாடி டக் அவுட் ஆனார். பின்னர், அணி சூப்பர் 12 சுற்று ஆட்டத்தின்போது காயம் காரணமாக அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். இந்த விவகாரம் குறித்து இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) இன்னும் அறிக்கை வெளியிடவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in