உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு முதல் வெற்றி! நெதர்லாந்து போராடி தோல்வி!

இலங்கை  வெற்றி
இலங்கை வெற்றி

நெதர்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.

லக்னோவில் நடைபெற்ற 19வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50வது ஓவரில் 262 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணி சார்பில் ஏல்கல்பீரிச் 70 ரன்னும், லோகன் 59 ரன்னும் எடுத்தனர். இலங்கை சார்பில் மதுஷங்கா, ரஜிதா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

263 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 48.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 263 ரன் எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் சமரவிக்ரமா 91 ரன்னும், பதும் நிஸங்கா 54 ரன்னும் எடுத்தனர். நெதர்லாந்து சார்பில் ஆர்யன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இலங்கை அணி உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in