ஆப்கானிஸ்தானை அடித்து துவைத்தது இலங்கை: சூப்பர் 12 சுற்றில் அபாரம்!

ஆப்கானிஸ்தானை அடித்து துவைத்தது இலங்கை: சூப்பர் 12 சுற்றில் அபாரம்!

இன்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்றுப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இலங்கை எளிதாக வென்றது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில், பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கன் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரமனுல்லா குர்பாஸ் மற்றும் உஸ்மான் கனி ஆகியோர் சிறப்பாக விளையாடினர். குர்பாஸ் 28 ரன்னிலும், கனி 27 ரன்னிலும் ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய இப்ராகிம் ஜட்ரான் 22 ரன்களிலும், நஜிபுல்லா ஜட்ரான் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் குவித்தது. இலங்கை சார்பில் ஹசரங்கா 3 விக்கெட்டுகளையும், லஹிரு குமாரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

145 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிஷாங்கா 10 ரன்னிலும், மெண்டிஸ் 25 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் தனஞ்ஜெயா டி சில்வா பொறுப்பாக ஆடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதனால் 18.3 ஓவர்களில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. தனஞ்ஜெயா ஆட்டமிழக்காமல் 66 ரன்கள் எடுத்திருந்தார். 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை பந்துவீச்சாளர் ஹசரங்கா ஆட்ட நாயகனாக தேர்வானார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in