சினிமாவில் கவனம்: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் ஸ்ரீசாந்த்

சினிமாவில் கவனம்: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் ஸ்ரீசாந்த்

இந்திய அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், முதல் தர கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளராக வலம் வந்தவர் ஸ்ரீசாந்த். இலங்கை அணிக்கு எதிராக நாக்பூரில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஸ்ரீசாந்த், 2007 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் களமிறங்கினார். இந்நிலையில், 2013 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் ஸ்ரீசாந்த்துக்க வாழ்நாள் தடைவிதிக்கப்பட்டது. பின்னர், நீதிமன்றம் வரை சென்று தடையை நீக்கினார் ஸ்ரீசாந்த்.

ஆனால் அவருக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து, சினிமாத்துறையில் கால் பதித்தார். தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்த ஸ்ரீசாந்த், கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியே இருந்தார்.

இந்நிலையில், முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்ரீசாந்த் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இந்த முடிவு என்னுடையது மட்டுமே. இது எனக்கு மகிழ்ச்சியைத் தராது என்று எனக்குத் தெரிந்தாலும், என் வாழ்க்கையில் இந்த நேரத்தில் எடுப்பது சரியான மற்றும் மரியாதைக்குரிய செயல் என இந்த முடிவை கருதுகிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in