இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப்போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இதனைக் காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத்திற்கு படையெடுத்துள்ளனர். ஏற்கெனவே ரயில் டிக்கெட் புக்கின் முடிவடைந்த நிலையில், விமான டிக்கெட் விலை தாறுமாறாக எகிறியுள்ளது.
இந்நிலையில், ரசிகர்களின் வசதிக்காக இந்தியன் ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. அதில் டெல்லியில் இருந்து இன்று மாலை புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை அகமதாபாத் சென்று சேரும். பின்னர் இறுதிப்போட்டி முடிந்த பின்பு திங்கட்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு, டெல்லிக்கு திரும்பும்.
மேலும், மும்பையில் இருந்து அகமதாபாத்திற்கு மூன்று சிறப்பு ரயில்கள் இன்று இயக்கப்படுகின்றன. இதில் குறைந்தபட்சம் ரூ.620-ம், அதிகபட்சமாக ரூ.1665-ம் டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா பங்கேற்ற எந்த ஆட்டத்திலும் தோல்வியடையாமல் தொடர்ந்து வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.
1983 மற்றும் 2011 ஆகிய இருமுறை கோப்பை வென்ற இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதேபோல 6வது முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலியா இருக்கிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையில் மிகக் கடுமையான போட்டி இருக்கும் என்பதால், இந்த போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
நடிகர் கமல் பன்றியை வளர்கிறார்... பிரபல பாடகி ஆவேசம்!
சத்தமில்லாமல் நடந்த மகனின் பட பூஜை... கண்டுகொள்ளாத விஜய்!
பகீர் வீடியோ... 40 தொழிலாளர்களின் உயிர் போராட்டம்... மீட்பு பணிகள் நிறுத்தி வைப்பு!
நாளை உலகக் கோப்பை பைனல்... லட்சங்களில் எகிறிய தங்கும் விடுதி வாடகை!