ரூ.16.5 கோடிக்கு ஏலம் போன கிறிஸ் மோரிஸ் திடீர் ஓய்வு!

ஐபிஎல் வரலாற்றில் சாதித்த தென் ஆப்பிரிக்க வீரர்
கிறிஸ் மோரிஸ்
கிறிஸ் மோரிஸ்தி இந்து

ஐபிஎல் போட்டியில் ரூ.16.5 கோடிக்கு ஏலம் போன தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.

2012-ம் ஆண்டு சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமான தென் ஆப்பிரிக்க வீரர் மோரிஸ், 2013-ல் ஒருநாள் போட்டியிலும், 2016-ல் டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கினார். ஆனால், 2019-ம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இந்நிலையில், அனைத்து கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் திடீரென அறிவித்துள்ளார்.

கிறிஸ் மோரிஸ்
கிறிஸ் மோரிஸ்தி இந்து

இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 173 ரன்களும், 12 விக்கெட்டுகளும், 42 ஒருநாள் போட்டிகளில் 468 ரன்களும், 48 விக்கெட்டுகளும், 23 டி20 போட்டிகளில் 133 ரன்களும், 34 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான், பெங்களூரு அணிகளுக்காக விளையாடி உள்ள மோரிஸ், கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணி இவரை ரூ.16.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அப்போது, ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை பெற்றவர் மோரிஸ். 81 ஐபிஎல் ஆட்டங்களில் 618 ரன், 95 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அமீரகம் உட்பட பல்வேறு நாடுகளில் நடக்கும் டி20 தொடர்களிலும் விளையாடி உள்ளார். “ஓய்வுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவில் உள்ள டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகச் செயல்பட உள்ளேன்” என்று மோரிஸ் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in