அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்... 1 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி!

தென்னாப்பிரிக்கா வெற்றி
தென்னாப்பிரிக்கா வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணி 46.4 ஓவருக்கு 270 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக அசாம் ஷாவுத் ஷாகில் 52 ரன்னும், பாபர் அசாம் 50 ரன்னும் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா சார்பில் தப்ரியாஸ் ஷாம்ஷி 4 விக்கெட்டுகளௌ வீழ்த்தினார்.

271 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் ஏய்டன் மர்க்ரம் மட்டுமே நிலைத்து ஆடி 91 ரன் எடுத்தார். அவரும் ஆட்டமிழக்க அந்த அணி தடுமாறியது. ஒரு கட்டத்தில் 1 விக்கெட் மட்டுமே இருக்க 10 ரன் தேவை என்ற நிலையில் அந்த அணியின் கேஷவ் மகாராஜ், ஷாம்ஷி ஆகியோர் விக்கெட் இழக்காமல் ஆடி வெற்றிக்கான ரன்னை எடுத்தனர். இதன் மூலம் 1 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலிலும் முதலிடம் பிடித்தது.

பாகிஸ்தான் வீரர்கள்
பாகிஸ்தான் வீரர்கள்

இந்த தோல்வி மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இது அந்த அணி ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in