வங்கதேசத்திற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா 149 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையின் 23வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா - வங்கதேச அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. 50 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 382 ரன் எடுத்தது. அந்த அணியின் குவின்டின் டிகாக் 174 ரன்னும், கிளாசன் 90 ரன்னும் எடுத்தனர். வங்கதேசம் சார்பில் ஹசன் முகமது அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
383 என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம் அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணி 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன் எடுத்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா 149 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசம் சார்பில் மஹமதுல்லா அதிகபட்சமாக 111 ரன் எடுத்தார். தென்னாப்பிரிக்காவின் ஜெரால்டு காட்ஸி அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த தோல்வி மூலம் வங்கதேசம் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி என்னும் வாய்ப்பை முழுவதுமாக இழந்தது. இந்த வெற்றி மூலம் தென்னாப்பிரிக்கா புள்ளிப்பட்டியலில் 2ம் இடம் பிடித்தது.