டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் தென்னாப்பிரிக்க விரர்கள் பட்டியல்... வெளியானது அறிவிப்பு!

தென்னாப்பிரிக்கா அணி
தென்னாப்பிரிக்கா அணி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ஆம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடக்கவுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இதில் பங்கேற்கும் 20 அணிகளும் வரும் மே 1ஆம் தேதிக்குள் 15 பேர் கொண்ட அணியை அறிவிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்கா

நேற்று முதல் அணியாக நியூசிலாந்து அணி தங்களது அணியை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இன்று இங்கிலாந்து அணியும் தங்களது அணியை அறிவித்தது. மேலும், கேப்டனாக ரோகித் ஷர்மா மற்றும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட 15 பேர் மற்றும் 4 மாற்று வீரர்கள் கொண்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் உலகக் கோப்பையில் பங்கேற்கும் அய்டம் மார்கரம் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள பட்டியலில், ‘அய்டன் மார்கரம் (கேப்டன்), ஒட்னியல் பார்ட்மேன், ஜெரால்டு கோட்ஸீ, குயிண்டன் டி காக், ஜார்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ்’ உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அரசு உஷார்... கேரளாவில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல் பரவல்!

பழிக்குப்பழி... திருச்சியில் பிரபல ரவுடி முத்துக்குமார் பட்டப்பகலில் படுகொலை!

தூக்க கலக்கத்தில் பாறையில் மோதிய வேன் ஓட்டுநர்... 31 பேர் படுகாயம்!

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபர்... சுற்றி வளைத்து கைது செய்த போலீஸார்!

கார் மீது சிலிண்டர் லாரி மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in