உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி இலக்காக 358 ரன்னை நிர்ணயித்துள்ளது தென்னாப்பிரிக்கா.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் டெம்ப பவுமா சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து, குவின்டின் டிகாக்குடன் ஜோடி சேர்ந்த வாண்டர் டூசன் அதிரடியாக ஆடினார். இதில் டிகாக் 114 ரன்னிலும், டூசன் 133 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். டேவிட் மில்லர் தனது பங்கிற்கு ஒரு அரை சதத்தை கடந்தார். இதன் மூலம் அந்த அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 357 ரன் குவித்தது. நியூசிலாந்து சார்பில், டிம் சவுதி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 358 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் 5வது முறையாக இன்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 5வது முறையாக 350 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
முற்றுகிறது மோதல்... பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக பொன்முடி அறிவிப்பு!
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
பட்டத்து இளவரசியாக முடிசூடினார் 18 வயது லியோனார்!
தீபாவளிக்கு தெறிக்கப் போகுது... மதுப் பிரியர்கள் உற்சாகம்; நவ.10 முதல் புதிய ‘பீர்’ வகைகள் அறிமுகம்!