
உலகக் கோப்பை தொடரின் முக்கிய ஆட்டம் ஒன்றில் தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமுள்ள 45 லீக் போட்டிகளில் 41 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதில் இந்தியா இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து, முதல் அணியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. தென்னாப்பிரிக்க அணி 8 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றியும், 2ல் தோல்வியையும் சந்தித்து 12 புள்ளிகளுடன் 2 இடத்தை பிடித்து, அரையிறுதிக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலிய அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றியும், 2ல் தோல்வியையும் சந்தித்து 12 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 3வது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. நியூசிலாந்து மொத்தமுள்ள 9 லீக் போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதன் மூலம் அந்த அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது.
ஆனால், அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு பெருமளவு உறுதி செய்யப்பட்டாலும், நாளை நடைபெறும் பாகிஸ்தான் - இங்கிலாந்து ஆட்டத்தை பொறுத்தே அமையும் எனலாம். ஒருவேளை பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை மிக மிக அதிக ரன் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே, அந்த அணியால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அகமதாபாத்தில் நடைபெறும் நடப்பு உலகக் கோப்பை தொடரின் 42வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி - ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. தென்னாப்பிரிக்கா ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்ற நிலையில், இன்றையப் போட்டியின் முடிவு அந்த அணியைப் பாதிக்காது. அதே நேரம் இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் அணி, இன்றையப் போட்டியில் ஜெயித்தால்,வெற்றியுடன் வெளியேறும்.
இதையும் வாசிக்கலாமே...
பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!
வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
ஐயப்பனுக்கு தங்க அங்கி.. சபரிமலையில் இன்று நடை திறப்பு!
செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!