அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள்! சொதப்பும் தென்னாப்பிரிக்கா வீரர்கள்; ஆஸ்திரேலியா ஆதிக்கம்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. ஆஸ்திரேலியா வீரர்கள் அபாராக பந்துவீசி வருகிறார்கள்.
மும்பையில் நேற்று நடந்த முதல் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றது. அடுத்து இறுதிப் போட்டிக்கு எந்த அணி தகுதிப்பெறும் என்பதை நிர்ணயிக்கக் கூடிய இரண்டாவது அரையிறுதிப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து குயின்டன் டி காக்- டெம்பா பவுமா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் முதலில் பந்து வீசினார். இவரது பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா தொடக்க வீரர்கள் திணறினர். ஒரு கட்டத்தில் 4 பந்துகளை சந்தித்த பவுமா, ஸ்டார்ட் பந்தில் டக்அவுட் ஆகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து மிட்செல் ஸ்டார்க் களமிறங்கினார். இவரும் ஆஸ்திரேலியா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார். அதே நேரத்தில் தொடக்க வீரர் டி காக் 14 பந்தில் 3 ரன்கள் எடுத்திருந்தபோது மிட்செல் ஸ்டார்க் பந்தில் ஆட்டம் இழந்தார்.
இதைத் தொடர்ந்து ஐடன் மார்க்ரம் களமிறங்கினார். இந்த ஜோடி சிறிது நேரம் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. 20 பந்தில் 10 ரன் எடுத்திருந்த மார்க்ரம் ஸ்டார் பந்தில் வீழ்ந்தார். இவர் இரண்டு பவுண்டரிகள் அடித்திருந்தார். 24 ரன்கள் எடுப்பதற்குள் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அதே நேரத்தில் ஹென்ரிச் கிளாசென் 10 ரன்னிலும், டேவிட் மில்லர் 10 ரன்னிலும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் மிகவும் நேர்த்தியாக பந்து வீசி வருகின்றனர்.
இவர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இரண்டாவது அரையிறுதிப் போட்டி மிகவும் சுவாரஸியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தென்னாப்பிரிக்கா வீரர்களின் சொதப்பல் ஆட்டத்தால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதனிடையே, 14வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் எடுத்துள்ளது. மழையால் போட்டி கைவிடும் பட்சத்தில் நாளை இந்தப் போட்டி நடைபெறும். தென்னாப்பிரிக்காவுக்கு மழை கருணை காட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
இதையும் வாசிக்கலாமே...
உஷார்; வங்கக்கடலில் நாளை உருவாகும் 'மிதிலி' புயல்: வானிலை மையம் எச்சரிக்கை!
இயக்குநர் மணிவண்ணன் மரணத்திற்கு இதுதான் காரணமா?: 10 ஆண்டுகளுக்குப் பின் வெளியான உண்மை!
'இந்த அரண்மனை வாடகைக்கு விடப்படும்': ஜோத்பூர் இளவரசியின் சுயதொழிலால் கரன்சி மழை!
உத்தரப் பிரதேசத்தில் டெல்லி-சஹர்சா வைசாலி அதிவிரைவு ரயிலில் தீவிபத்து... 19 பேர் காயம்