படுதோல்வி ஏன்?: இலங்கை அணியிடம் விளக்கம் கேட்கும் கிரிக்கெட் வாரியம்!

இலங்கை அணி
இலங்கை அணி

நடப்பு உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடும் என கணித்த பல அணிகள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அதிலும் இங்கிலாந்து, இலங்கை அணிகளின் தோல்வி கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரே நேரம் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அணியைப் பொறுத்தவரை இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு தகுதி சுற்று மூலமாகவே நுழைந்தது. அதேநேரம், அந்த அணி கடைசியாக விளையாடிய தொடர்களிலும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரின் இறுதி போட்டியைத் தவிர்த்து மற்ற ஆட்டங்களில் அந்த அணி சிறப்பாகவே விளையாடியது.

இலங்கை அணி
இலங்கை அணி

ஆனால், உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் இருந்தே அந்த அணி தோல்வியை சந்தித்து வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளை மட்டுமே வீழ்த்தியுள்ளது. மற்ற 5 போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிலும் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியாவிடம் 55 ரன் மட்டுமே எடுத்து, 302 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இலங்கை வீரர் ஹசரங்கா
இலங்கை வீரர் ஹசரங்கா

இந்த தோல்வியை இலங்கை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததால், சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இதனால், கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், அணி பயிற்சியாளர் டாம் மூடி, அணி வீரர்களிடம் இந்தியாவுடனான தோல்வி குறித்து பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, கிரிக்கெட் வாரியம் சில கேள்விகளையும் முன் வைத்துள்ளது.

இலங்கை அணி
இலங்கை அணி
  • மாதிரியான திட்டமிடலும், தயாரிப்பும் மேற்கொள்ளப்பட்டது

  • போட்டிக்கு இடையே சூழலை பொறுத்து எப்படியான முடிவுகள் எடுக்கப்பட்டது.

  • போட்டிக்கு முன் அணி தேர்வு எப்படி செய்யப்பட்டது. வீரர்களின் காயம், அவர்களது ஆட்டத்திறன் பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டதா?

  • ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் அணியினர் கலந்துரையாடினார்களா? அதில் இருந்து எப்படியான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற கேள்விகள் எழுப்பட்டுள்ளது.

இது அணி வீரர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இனி வரும் போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்று முதல் 8 இடத்தைப் பிடிக்குமா என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது. அப்படி அடுத்த போட்டிகளிலும் தோற்றால் 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன் கோப்பை தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு அந்த அணி தள்ளப்படும்.

இதையும் வாசிக்கலாமே...

மிஸ் பண்ணாதீங்க... இன்றும், நாளையும் வாக்காளர் பெயர் சேர்க்க, திருத்த தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்!

நாளை இரவு வரை 66 ரயில்கள் ரத்து... பயணத்தை திட்டமிட்டுக்கோங்க!

அதிர்ச்சி... கழுத்தில் காயங்களுடன் பிரபல நடிகை உயிரிழப்பு! மர்ம மரணமாக வழக்குப்பதிவு!

அதிகளவு பூச்சிக்கொல்லி மருந்துடன் ஏலக்காய்... சபரிமலையில் 6,65,000 அரவணை பாயாச டின்களை அழிப்பு!

திருச்சியில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in