நியூசிலாந்து அபார பந்துவீச்சு: 171 ரன்களில் சுருண்ட இலங்கை!

நியூசிலாந்து - இலங்கை ஆட்டம்
நியூசிலாந்து - இலங்கை ஆட்டம்

நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அந்த அணி வெற்றி பெற 172 ரன்னை இலக்காக இலங்கை நிர்ணயித்தது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

இதையடுத்து, களமிறங்கிய இலங்கை வீரர்கள், நியூசிலாந்து வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அந்த அணி 46.4 ஓவர் முடிவில் 171 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிபட்சமாக குஷால் பெரேரா 28 பந்துகளில் 51 ரன்னும், தீக்‌ஷனா 38 ரன்னும் எடுத்தனர்.

நியூசிலாந்து சார்பில் டிரென்ட் போல்ட் அதிபட்சமாக 3 விக்கெட்டுகளையும், சான்ட்னர், ஃபெர்குசன், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. 4.2 ஓவர்களில் அந்த அணி 22 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் குறைந்த ஓவரில் வெற்றி பெற்றால் நியூசிலாந்து அணி எளிதாக அரையிறுதிக்கு தகுதி பெறும். அதேநேரம், இலங்கை அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தகுதியையும் இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

நெகிழ்ச்சி... வேலைக்கு அனுப்பிய பெற்றோர்!  முதலாளியால் பட்டம் பெற்ற மாணவிகள்!

ஹனிமூனில் அசோக்செல்வனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!

மேலும் 38 மீனவர்கள் விடுதலை- நிபந்தனைகளுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

பயங்கரம்... ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ... உடல் கருகி 2 பேர் பலி

தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்னென்ன? எகிறும் எதிர்பார்ப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in