ஏடிபி டென்னிஸ் சாம்பியன்ஷிப்… 'நம்பர் ஒன்' வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தினார் சின்னர்!

ஜானிக் சின்னர்
ஜானிக் சின்னர்

ஆடவர் டென்னிஸ் தவரிசைப்பட்டியலில் முதல் 8 இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ஏ.டி.பி. இறுதிச் சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள வீரர்கள் சிவப்பு, பச்சை என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ரவுன்ட்-ராபின் முறையில் நடைபெறும் இந்த போட்டிகளில், ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிப்பவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

ஜோகோவிச் - சின்னர்
ஜோகோவிச் - சின்னர்

பச்சைப் பிரிவில் இடம் பெற்றுள்ள 'நம்பர் ஒன்' வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தரவரிசையில் நான்காம் இடத்தில் இருக்கும் இத்தாலி வீரரான ஜானிக் சின்னர் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஜோகோவிச்சுக்கு கடும் சவால் அளித்த சின்னர் 7-5,6-7,6-6 என்ற செட்களில் போராடி வெற்றி பெற்றார்.

இதில் 3-செட்டுகளுமே டை பிரேக்கர் வரை சென்றது. மேலும், ஜோகோவிச் தொடர்ந்து 19 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், சின்னர் அந்த வெற்றிப்பயணத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஜோகோவிச் தனது அடுத்த ஆட்டத்தில் ஹூபர்ட் ஹர்காக்ஸ் உடன் விளையாட உள்ளார். சின்னர் தனது அடுத்த ஆட்டத்தில் ஹோல்கர் ரூன் உடன் மோத உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

மும்பை காவல் துறைக்கு திடீர் மிரட்டல்: இந்தியா - நியூசிலாந்து போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

நரி, அமுல் பேபி என தினேஷ்- விஷ்ணு மோதல்:பிக் பாஸ் இல்லத்தில் அதகளம்!

'பிரதமர் மோடிதான் சிறந்த நடிகர்' - நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்!

என்.சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை: தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடையா?: உயர் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in