அதிகமா ஆடக்கூடாது... நடத்தை விதிகளை மீறிய கொல்கத்தா வீரர் ராணாவுக்கு ஐபிஎல் போட்டியில் விளையாட தடை!

ஹர்ஷித் ராணா
ஹர்ஷித் ராணா

ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் விதிமுறைகளை மீறியதற்காக தடை விதிக்கப்படும் முதல் வீரர் ஹர்ஷித் ராணா என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றையப் போட்டியில் டெல்லி வீரர் அபிஷேக் போரெலின் விக்கெட்டினை வீழ்த்திய ஹர்ஷித் ராணா அவருக்கு முன்பாக பறக்கும் முத்தமிடுவது போல செய்கை காட்டினார். மேலும், பெவிலியன் செல்லும் திசையை நோக்கியும் பறக்கும் முத்தம் கொடுத்தார். அதேபோல ராஷிக் சலாம் பேட் செய்யும்போது, பேடின் மேலே ஸ்டம்புகள் மீது படாமல் சென்ற பந்துக்கு விக்கெட் கேட்டு நடுவர்களுக்கு நெருக்கடி கொடுத்தார்.

ஹர்ஷித் ராணா
ஹர்ஷித் ராணா

இதனைத் தொடர்ந்து ஐபிஎல் நடத்தை விதிமுறையில் படிநிலை ஒன்றின் கீழ் விதி 2.5-ஐ ராணா மீறியதாக தெரிவிக்கப்பட்டு அவருக்கு அபராதம் மற்றும் தடை விதிக்கப்பட்டது. இதன்படி, அவருக்கு ஒரு போட்டியின் 100 சதவிகித சம்பளத்தை அபராதமாக விதித்தும், ஒரு போட்டியில் விளையாட தடை விதித்தும் ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக, சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் மயங்க் அகர்வாலை ஆட்டமிழக்கச் செய்தபோதும், இதே விதிமீறலில் ஈடுபட்ட ராணாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஹர்ஷித் ராணா
ஹர்ஷித் ராணா

இந்த தடை காரணமாக வருகிற மே 3 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் ஹர்ஷித் ராணாவால் விளையாட முடியாது. இதனால் கொல்கத்தா அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் ராணா கொல்கத்தா அணிக்காக 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அரசு உஷார்... கேரளாவில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல் பரவல்!

பழிக்குப்பழி... திருச்சியில் பிரபல ரவுடி முத்துக்குமார் பட்டப்பகலில் படுகொலை!

தூக்க கலக்கத்தில் பாறையில் மோதிய வேன் ஓட்டுநர்... 31 பேர் படுகாயம்!

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபர்... சுற்றி வளைத்து கைது செய்த போலீஸார்!

கார் மீது சிலிண்டர் லாரி மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in