இந்திய வீரர் ஷிவம் துபேவுக்கு இரட்டிப்பு சந்தோஷம்!

ஐபிஎல் போட்டியில் ரூ.4 கோடிக்கு ஏலம்!
இந்திய வீரர் ஷிவம் துபேவுக்கு இரட்டிப்பு சந்தோஷம்!
பிறந்த குழந்தையுடன் இந்திய வீரர் ஷிவம் துபேtwitter

சென்னை அணிக்கு ரூ.4 கோடிக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய வீரர் ஷிவம் துபேவுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் இந்திய வீரர் ஷிவம் துபேவை ரூ.4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. இந்நிலையில் சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய வீரர் ஷிவம் துபேவுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் அவருக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரேயொரு ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள ஷிவம் துபே 9 ரன்கள் அடித்துள்ளார். 13 டி20 போட்டியில் விளையாடி 105 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 54 ரன்கள் அடித்துள்ளார். டி20 ஐபிஎல்லில் 69 போட்டியில் விளையாடி உள்ள அவர், மொத்தம் 1052 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 64 ரன்கள் அடித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in