ஷேன் வார்னுக்குப் பிரியாவிடை!

இன்று மெல்பர்ன் நகரில் இறுதிச்சடங்கு நடந்தது
ஷேன் வார்னுக்குப் பிரியாவிடை!
Updated on
1 min read

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னின் இறுதிச்சடங்கு இன்று அவரது சொந்த ஊரான மெல்போர்னில் நடைபெற்றது.

தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள சமுயி தீவில் தனது நண்பர்களுடன் சென்றிருந்த ஷேன் வார்ன், மார்ச் 4-ல் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது உடல், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கடந்த வாரம் மெல்போர்னுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

இந்நிலையில், இன்று அவரது இறுதிச்சடங்கு மெல்போர்னில் உள்ள செயின் கில்டா கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது. ஷேன் வார்னின் மகன்களான ப்ரூக், ஜாக்சன், சம்மர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், நண்பர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மார்க் டெய்லர், ஆலன் பார்டர், மைக்கேல் வான், க்ளென் மெக்ராத், மைக்கேல் க்ளார்க் உள்ளிட்டோரும் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in