மேற்கிந்திய தீவுகள் அணியை மிரளவைத்த ஸ்காட்லாந்து: முன்னாள் சாம்பியனை வீழ்த்தியது குட்டி அணி

மேற்கிந்திய தீவுகள் அணியை மிரளவைத்த ஸ்காட்லாந்து: முன்னாள் சாம்பியனை வீழ்த்தியது குட்டி அணி

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்டின் இன்றைய லீக் போட்டியில் இரண்டுமுறை டி20 சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணியை குட்டி அணியான ஸ்காட்லாந்து அணி வீழ்த்தி அதிர்ச்சியளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜார்ஜ் மன்சே ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 66 ரன்கள் குவித்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்த வீரகளும் கணிசமான ரன்களை குவித்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை குவித்தது ஸ்காட்லாந்து.

161 ரன்களை எளிதாக தொட்டுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆட்டக்காரர்கள் ஸ்காட்லாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேற்கிந்திய அணியின் சார்பில் ஜாசன் ஹோல்டர் மட்டும் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார். இதனால் ஸ்காட்லாந்து அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

குறிப்பாக இந்தப் போட்டியில் ஸ்காட்லாந்து அணியின் பந்துவீச்சு அதிரடியாக இருந்தது. இந்த அணியின் சார்பில் மார்க் வாட் 3 விக்கெட்டுகளையும், மைக்கேல் லீஸ்க் மற்றும் ப்ராட் வீல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 66 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த ஜார்ஜ் மன்சே ஆட்டநாயகனாக தேர்வானார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in