‘இரவெல்லாம் கண்விழித்து இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் பார்த்தேன்’ சத்ய நாதெல்லா சிலாகிப்பு

சத்ய நாதெல்லா - இந்திய அணி
சத்ய நாதெல்லா - இந்திய அணி

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியை காண்பதற்காக, இரவு முழுவதும் கண் விழித்திருந்ததாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்ய நாதெல்லா சிலாகித்துள்ளார்.

டெக் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது மைக்ரோசாப்ட். இந்த தலைமை நிர்வாக அதிகாரியாக விளங்குபவர் இந்திய வம்சாவளியான சத்ய நாதெல்லா. 'இக்னைட் 2023’ என்ற தலைப்பில் சியாட்டிலில் நடைபெற்ற டெவலப்பர் மாநாட்டில் மைக்ரோசாஃப்ட் சத்ய நாதெல்லா பங்கேற்று உரையாற்றி உள்ளார். அப்போது இந்தியா - நியூசிலாந்து இடையிலான கிரிக்கெட் போட்டியை தான் ரசித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

சத்ய நாதெல்லா
சத்ய நாதெல்லா

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு இந்தியா திடமாக முன்னேறியுள்ளது. பேட்டிங்கில் கோலி, கில், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் பாராட்டுக்குரிய வகையில் அடித்தாடி, முகமது ஷமி பந்துவீச்சில் ரசிகர்களை கவர்ந்தார்.

பெரும் ஆர்வத்தோடு உலகம் நெடுகிலும் இருந்து லட்சோபலட்சம் ரசிகர்கள் தொலைக்காட்சியிலும், இணையம் வாயிலாகவும் கண்டு ரசித்தனர். அவர்களில் சத்ய நாதெல்லாவும் ஒருவராக சேர்ந்திருக்கிறார்.

இந்த அரையிறுதிப் போட்டியை கண் விழித்து ரசித்த வேகத்தில் சியாட்டிலில் நடைபெற்ற டெவலப்பர் மாநாட்டில் கலந்து கொண்ட சத்ய நாதெல்லா அங்கேயும் கிரிக்கெட் புகழ் பாடியிருக்கிறார்.

சத்ய நாதெல்லா
சத்ய நாதெல்லா

”இந்தியா- நியூசிலாந்து இடையிலான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியைக் காண இரவு நெடுக நான் முழுவதும் கண் விழித்திருந்தேன். சற்று முன்னர்தான் போட்டி முடிந்தது. கிரிக்கெட் பார்த்த கையோடும், அதன் நினைவுகளோடும் இந்த கூட்டத்துக்கு வந்துள்ளேன். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றிபெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு இணையாக சத்ய நாதெல்லாவுக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதயங்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

‘ஜெயிலர் 2’ - மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணி!

பதற்றம்! சிப்காட்டுக்கு எதிராக போராட்டம்; விவசாயிகள் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

ஷமி மீது கேஸ் போட மாட்டீங்கள்ல? மும்பை போலீஸை ஜாலியாக வம்பிழுத்த டெல்லி போலீஸ்!

வாட்ஸ் அப் வழங்கும் கசப்பான புத்தாண்டு ‘பரிசு’... அன்லிமிடெட் சாட் பேக்கப்புக்கு செக்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in