முதல் சந்திப்பில் சச்சின் காலில் விழ வைத்து கோலியை கிண்டல் செய்த சக வீரர்கள்… சுவாரஸ்ய பகிர்வு!

முதல் சந்திப்பில் சச்சின் காலில் விழ வைத்து கோலியை கிண்டல் செய்த சக வீரர்கள்… சுவாரஸ்ய பகிர்வு!
Updated on
1 min read

டிரெஸ்ஸிங் ரூமில் விராட் கோலியை முதலில் பார்த்த போது நடந்த சுவாரஸ்ய நிகழ்வை சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்து சச்சின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். இதனால் உலகம் முழுவதும் இருந்து விராட் கோலிக்கு வாழ்த்து குவிகிறது. இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் விராட் கோலியை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்திய வீரர்கள் டிரெஸ்ஸிங் அறையில்  உங்களை முதன்முதலில் நான் சந்தித்தபோது, மற்ற அணியினர் என் கால்களைத் தொடும்படி கிண்டல் செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஆனால் அதற்கு பிறகு விரைவில், உங்கள் ஆர்வத்தாலும் திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள். அந்த சிறுவன் ‘விராட்’ வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட நான் மகிழ்ச்சியடைய முடியாது.

அதுவும் மிகப் பெரிய அரங்கில், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், எனது சொந்த மைதானத்தில் இது நடந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று சச்சின் டெண்டுல்கர், கோலியை பாராட்டியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in