ஆசிய பாரா விளையாட்டு: இந்தியாவின் சச்சின் சர்ஜிராவ் தங்கம் வென்றார்!

சச்சின் சர்ஜிராவ்
சச்சின் சர்ஜிராவ்

ஆசிய பாரா விளையாட்டு தொடரில் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் சச்சின் சர்ஜிராவ் தங்கம் வென்றார்.

சீனாவின் ஹாங்சுவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இன்று நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சச்சின் சர்ஜிராவ் கிலோரி தங்கம் வென்றார். அவர் 16.03 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தினை கைப்பற்றினார்.

அதேபோல் குண்டு எறிதலில் 14.56 மீட்டர் தூரத்திற்கு எறிந்த இந்தியாவின் ரோகித்குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். இதுவரை 16 தங்கம், 21 வெள்ளி, 32 வெண்கலம் என 69 பதக்கத்துடன் பட்டியலில் 6வது இடத்தில் இந்தியா உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in