கிரிக்கெட் ஜாம்பவான் அளித்த பரிசு: விராட் கோலி நெகிழ்ச்சி!

பரிசுடன் விராட் கோலி.
பரிசுடன் விராட் கோலி.
Updated on
1 min read

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக விராட் கோலிக்கு, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அன்பு பரிசு ஒன்றை அளித்துள்ளார்.

13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்நிலையில், போட்டிக்கு முன்பாக இந்திய வீரர் விராட் கோலிக்கு, முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அன்பு பரிசு ஒன்றை அளித்துள்ளார்.

அதாவது சச்சின் டெண்டுல்கர் தான் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் அணிந்திருந்த ஜெர்சியை, கையெழுத்திட்டு பரிசாக அளித்துள்ளார்.

விராட் கோலி பரிசுடன்
விராட் கோலி பரிசுடன்

கடந்த 15-ம் தேதி நியூசிலாந்திற்கு எதிராக நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் விராட் கோலி ஒருநாள் போட்டியில் தனது 50வது சதத்தை நிறைவு செய்தார். அதன் மூலம் சச்சின் அடித்திருந்த 49 சதங்களைக் கடந்து. ஒருநாள் போட்டியில் அதிக சதமடித்த வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார்.

இந்நிலையில், கோலிக்கு சச்சின் இந்த அன்பு பரிசு அளித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in