மெஸ்ஸியின் ஜெர்ஸியில் ரோகித் ஷர்மா மகள்… வைரலாகும் புகைப்படம்!

ரோகித் ஷர்மா மகள் சமைரா
ரோகித் ஷர்மா மகள் சமைரா

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத அணியாக இந்தியா உள்ளது. இந்நிலையில், கடந்த 15ம் தேதி நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை 70 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

சச்சின் டெண்டுல்கர், டேவிட் பெக்காம்
சச்சின் டெண்டுல்கர், டேவிட் பெக்காம்

இந்த போட்டியை காண இங்கிலாந்து மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணிகளின் நட்சத்திர வீரர் டேவிட் பெக்காம் வருகை தந்திருந்தார். அவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருடன் அமர்ந்து முழு ஆட்டத்தையும் கண்டு ரசித்தார். இதைத்தொடர்ந்து, இந்திய அணி வீரர்களை சந்தித்து தனது பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு, அவர்களுடன் உரையாடினார். பெக்காம் தற்போது, அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கால்பந்து தொடரின் புதிதாக இணைக்கப்பட்ட இன்டர் மியாமி அணியை, ஜோஸ் மாஸ் என்பவருடன் இணைந்து வாங்கியுள்ளார். இந்த அணியில் உலகின் நம்பர் 1 வீரர் மெஸ்ஸி விளையாடி வருகிறார்.

ரோகித் ஷர்மா, டேவிட் பெக்காம்
ரோகித் ஷர்மா, டேவிட் பெக்காம்

இந்நிலையில், டேவிட் பெக்காம் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் ஷர்மாவிற்கு, மெஸ்ஸி அணிந்து விளையாடும் ஜெர்ஸி ஒன்றை பரிசாக அளித்தார். அதனை ரோகித் தனது மகள் சமைராவிற்கு அணிவித்து அழகு பார்த்தார். மெஸ்ஸி ஜெர்ஸி அணிந்த மகளின் புகைப்படத்தை ரோகித்தின் மனைவி ரித்திகா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். தற்போது இது இணையத்தில் வைரலாகியுள்ளது. கடந்த 15ம் தேதி பெக்காம் ரியல் மாட்ரிட் அணியில் விளையாடிய போது அணிந்திருந்த ஜெர்ஸியையும் ரோகித்திற்கு பரிசளித்தார். பதிலுக்கு தனது ஜெர்ஸியை ரோகித் ஷர்மா பரிசளித்தார். இருவரும் அந்த ஜெர்ஸிக்களை அணிந்து வெளியிட்ட புகைப்படம் ஏற்கெனவே இணையத்தை கலக்கியது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in